கிரிக்கெட்

கான்பூர் டெஸ்ட்: 3-ம் நாள் தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து அணி 249 ரன்கள் சேர்ப்பு + "||" + Until the tea break on the 3rd day, the New Zealand team lost 6 wickets and scored 249 runs.

கான்பூர் டெஸ்ட்: 3-ம் நாள் தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து அணி 249 ரன்கள் சேர்ப்பு

கான்பூர் டெஸ்ட்: 3-ம் நாள்  தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து அணி 249 ரன்கள் சேர்ப்பு
3-ம் நாள் தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்துள்ளது.
கான்பூர்,

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய  நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்  57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம் 95 ரன்களில் அக்சர் வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து வெளியேறினர். தேநீர் இடைவேளை வரை அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
2. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்திய அணிக்கு அபராதம்
முதலாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
3. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 157-2
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது.
4. தொடரை வெல்ல அணியில் அனைவரது பங்களிப்பும் முக்கியம்: ராகுல் டிராவிட்
இதுபோன்ற தொடர்கள் அணி வீரர்களின் ஒருமித்த பங்களிப்பின் காரணமாக வெற்றி பெறுகின்றன.
5. விக்கெட் கீப்பிங்கில் டோனியின் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பண்ட்..?
இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.