கிரிக்கெட்

ஒமிக்ரான் வைரஸ்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து + "||" + ICC calls off Women's World Cup Qualifier after new COVID-19 variant emerges

ஒமிக்ரான் வைரஸ்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து

ஒமிக்ரான் வைரஸ்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹராரே,

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாவே தலைநகர் ஹராரேவில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வருவதால் ஜிமாவே பல்வேறு நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இத்னால், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

சர்வதேச போட்டிகளில் பெறப்பட்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அணிகள் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆமதாபாத், லக்னோ அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்-யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆமதாபாத், லக்னோ அணிகள் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள 3 வீரர்கள் விவரத்தை நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
2. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கோலி விலகல்
தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.
4. இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் -தென்னாப்பிரிக்க கேப்டன்
இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தென்னாப்பிரிக்க அணி மேற்கொள்ளும் என அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.
5. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.