கிரிக்கெட்

புதுவகை கொரோனா பரவல்: தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு.! + "||" + Netherlands vs South Africa Series Postponed Amid Covid-19 Scare

புதுவகை கொரோனா பரவல்: தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு.!

புதுவகை கொரோனா பரவல்: தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு.!
புதுவகை கொரோனா வைரஸ் பரவலால், தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜோகன்னஸ்பர்க், 

நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியானது செஞ்சூரியனில் நேற்று கனமழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளும் இதே மைதானத்தில் நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸானது பரவி வருகிறது. புது வகை கொரோனாவை கருத்தில் கொண்டு இரு கிரிக்கெட் வாரியமும் கலந்து ஆலோசனை மேற்கொண்டு போட்டிகளை ஒத்திவைக்க முடிவுசெய்தன.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி போலெட்சி மொசெகி கூறும்போது, "தற்போது நிலவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். நிலைமை சீரானபிறகு போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு
'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க பெண் மந்திரி சர்ச்சை பேச்சு
2. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
3. தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து..!
ஒமைக்ரான் வைரஸ் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்க உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா- ஒமைக்ரான் பாதிப்பா?
கடலூர் : தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
5. தென்னாப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.