கிரிக்கெட்

கான்பூர் டெஸ்ட்; 2- வது இன்னிங்சில் இந்தியா திணறல் + "||" + New Zealand wrest control with quick wickets

கான்பூர் டெஸ்ட்; 2- வது இன்னிங்சில் இந்தியா திணறல்

கான்பூர் டெஸ்ட்; 2- வது இன்னிங்சில் இந்தியா திணறல்
கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4- ஆம் நாளான இன்று இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது.
கான்பூர், 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து  அணி 296- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  அடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஒரு விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து மொத்தம் 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய அணி தடுமாற்றம் கண்டது. புஜரா (22 ரன்கள்), கேப்டன் ரகானே (4 ரன்கள்), மயங்க் அகர்வால் (17 ரன்கள்)  ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்த ஜடேஜா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 22 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களுடனும், அஸ்வின் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
3. கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடும் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.