கிரிக்கெட்

முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்ட்யா.! + "||" + Do not add me to the team till I reach full fitness - Hardik Pandya.!

முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்ட்யா.!

முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்ட்யா.!
முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. அவர் இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் கலக்கும் ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணியில் தவிர்க்கமுடியாத வீரர்களுள் ஒருவராக வலம் வந்தார்.  

இவர் ஐ.பி.எல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது முதுகு பிரச்சனைகாக முன்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் அவர் முன்பு போல் விளையாடவில்லை. 

நடந்து முடிந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவரால் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. உலக கோப்பையில் மொத்தமாக 4 ஓவர்கள் மட்டுமே வீசிய ஹர்திக் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்ததிலிருந்து முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

டி20 உலகக் கோப்பையில் குறைவான ரன்கள் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான 3 டி20 போட்டிகளில் இடம்பெறாததால், அவர் அடுத்து தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போட்டிக்கு அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய தேர்வாளர்களிடம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா  கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது முழூ உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்க வாய்ப்பில்லை என்றே பல தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு சீசன்களில் அவரது செயல்பாடுகள் குறைந்துவிட்டதால் அவர் மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு வருவார் என்றே எதிர்பார்க்கபடுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு
10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.
2. இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.
3. ‘என் மீதான விமர்சனம் குறித்து கவலையில்லை’ - விராட் கோலி
எனது ஆட்டம் பற்றி வரும் விமர்சனம் குறித்து நான் கவலைப்படுவதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.
4. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று..!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: கே.எல் ராகுல் கேப்டனாக நியமனம்
ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.