வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 286 ரன்னில் ஆல்-அவுட்


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 286 ரன்னில் ஆல்-அவுட்
x

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

சட்டோகிராம், 

பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 330 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று வங்காளதேச சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர்களான அபித் அலி 133 ரன்களிலும், அப்துல்லா ஷபிக் 52 ரன்களிலும் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். வங்காளதேச இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 7 விக்கெட்டுகளை அள்ளினார். 

அடுத்து 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 39 ரன்களுடன் தள்ளாடுகிறது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story