கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஸ்வின்.! + "||" + Aswin became the 3rd Indian bowler to take more wickets in Test cricket.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஸ்வின்.!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஸ்வின்.!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளரானார் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
கான்பூர்,

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்தினார். இது அவருடைய 418-வது டெஸ்ட் விக்கெட் ஆகும். 

இதன்மூலம்  முன்பு 417 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். அவர் 80 டெஸ்டுகளில் இந்த இலக்கை எட்டியுள்ளார். அடுத்ததாக கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் இன்னும் சிறிது போட்டிகளிலேயே கபில் தேவ் சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள் விவரம்:

619 - அனில் கும்ப்ளே (132 டெஸ்டுகள்)
434 - கபில் தேவ் (131 டெஸ்டுகள்)
418*- ஆர். அஸ்வின் (80 டெஸ்டுகள்)
417 - ஹர்பஜன் சிங் (103 டெஸ்டுகள்)

தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புகழாரம்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி நேற்று அதிரடியாக அறிவித்தார்.
2. ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
4. இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட்: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் தாமதம்
2-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
5. ஆஷஸ் டெஸ்ட்: மீண்டெழுமா இங்கிலாந்து..? முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 82 ரன்கள் முன்னிலை
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.