கிரிக்கெட்

"அடுத்த போட்டியில் விளையாடுவேனா நிர்வாகம் தான் முடிவு செய்யும்"-ரஹானே பேட்டி + "||" + "Management will decide whether to play in the next match" - Rahane interview

"அடுத்த போட்டியில் விளையாடுவேனா நிர்வாகம் தான் முடிவு செய்யும்"-ரஹானே பேட்டி

"அடுத்த போட்டியில் விளையாடுவேனா நிர்வாகம் தான் முடிவு செய்யும்"-ரஹானே பேட்டி
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவேனா என்று முடிவு செய்வது நிர்வாகம் தான் என இந்திய அணியின் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிந்தது. அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக,  இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது, வீரர் கோலி வருகையால் எந்த வீரர் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம்.  ரசிகர்களும் வெளியேறும் வீரர் யாராவாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அணியில் பெரிய அளவில் மாற்றம் உள்ளது.

குறிப்பாகத் தொடக்க வீரர்களாக விளையாடி வந்த ரோஹித், ராகுல் ஆகியோர் இருவரும் இன்றி மாயங்க் அகர்வால் மற்றும் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக விளையாடி வருகின்றனர். தற்போது,  மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், பின் வரிசையில் அக்ஸர் படேல் என  வீரர்கள் அணியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி அணியில் இணையும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் ஒரு வீரர் கட்டாயம் வெளியேறி ஆகவேண்டும்.

ஆனால் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது டெஸ்டில் விளையாட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

இதுகுறித்து,  ரஹானே கூறுகையில்’’ என்னால் முடிந்த வரை அணியை நன்றாக வழி நடத்தி வந்தேன்.  இது மிகச்சிறந்த போட்டி.  நியூசிலாந்து அணியினர் கடுமையாகப் போராடினார்கள். ஐந்தாவது நாள் போட்டியில் கடுமையாக விளையாடி வந்தோம். கடைசி நேரத்தில் போட்டி டிராவானது.  

விராட் கோலி அடுத்த போட்டியில் இந்திய அணிக்குள் வருவார். அப்படி வரும்போது நான் விளையாடுவேனா என்பது மும்பை போட்டியின்   போதுதான் தெரியும். நிர்வாகம் முடிவு எடுக்கும்” என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு ஐ.நா. சபை ஆதரவு
உலகிலேயே மிகப்பெரிய இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
3. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
4. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
5. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.