ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் : 2ம் இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் : 2ம் இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்
x
தினத்தந்தி 30 Nov 2021 1:13 PM GMT (Updated: 30 Nov 2021 1:13 PM GMT)

வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


துபாய்

சட்டோகிராமில் நடந்த  வங்காளதேசம் - பாகிஸ்தான்  அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதல் இன்னிங்ஸில் வங்காள தேசம் லிட்டன் தாஸின் அபார சதம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமின் 91 ரன்களினால் 330 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி அபிட் அலி என்ற தொடக்க வீரரின் 133  ரன்களினால் பாகிஸ்தான் 286 ரன்கள் எடுத்தது.

ஆனால்   வங்காள தேசம் 2வது இன்னிங்சில் ஷாகின் அப்ரிடியின் ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரிடம் 5 விக்கெட்டுகளை கொடுத்து 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது  இதனையடுத்து 202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க வீரர் அபிட் அலி 91 ரன்களை விளாசினார், 

மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 73 ரன்கள் எடுத்தார், இருவரும் ஆட்டமிழந்த பிறகு அசார் அலி (24), பாபர் ஆசம் (13) வெற்றிக்கு வழிவகுத்தனர். . இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் என்பதால் வெற்றிக்காக  12 புள்ளிகளைப்  பெற்ற பாகிஸ்தான் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில்  2ம் இடத்திற்கு முன்னேறியது.


Next Story