கிரிக்கெட்

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம் + "||" + Dhoni signs CSK contract team management releases video with Rajinikanth BGM

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்
சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னை,

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைக்கபட்டனர்  என்பது குறித்த இறுதி பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி) எம்எஸ் டோனி ( ரூ. 12 கோடி) மொயீன் அலி (ரூ. 8 கோடி) ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகியோரை தக்கவைத்து கொண்டது.

இந்த நிலையில் சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணியின் கேப்டன் டோனி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்க டெஸ்ட்; டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்
டோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் நிகழ்த்திய சாதனையை பண்ட் தனது 26-வது டெஸ்டில் நிகழ்த்தியுள்ளார்.
2. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
3. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வராக வரவில்லை... தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.
5. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.