இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களில் ஆல் அவுட்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களில் ஆல் அவுட்
x
தினத்தந்தி 1 Dec 2021 12:04 PM GMT (Updated: 1 Dec 2021 12:04 PM GMT)

காலே மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இலங்கை 204 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

காலே,

இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 34.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது, நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் சேர்த்தார்.

கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை வீரர் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் சாய்த்தார்.

இந்த நிலையில், தற்போது 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story