அதிகமுறை டக் அவுட்டாகிய கேப்டன்...விராட் கோலி மோசமான சாதனை...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Dec 2021 2:23 PM GMT (Updated: 3 Dec 2021 2:23 PM GMT)

டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலியின் 10-வது டக் அவுட் இதுவாகும்.

மும்பை ,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் டெஸ்ட் அரங்கில் தனது 4 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய  அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட் வீழ்த்தி உள்ளார் .

இந்த போட்டியில்  3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி  4 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார் . இந்த விக்கெட் மூலம் விராட்கோலி மோசமான சாதனை பட்டியலில் தனது பெயரை சேர்த்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலியின்  10-வது டக் அவுட் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை, கேப்டனாக விளையாடி டக் அவுட் ஆனவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் கோலி உள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 13 முறை   டக் அவுட்  ஆகி முதல் இடத்தில உள்ளார்.இதற்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 10 முறை டக் அவுட்  ஆகியுள்ளார். தற்போது அவருடன் கோலி கைகோர்த்துள்ளார்.

அதுமட்டுமின்றி விராட் கோலி கேப்டனாக ஒரு வருடத்தில் நான்கு முறை டக் அவுட் ஆகி உள்ளார். ஒரே வருடத்தில் அதிக முறை டக் அவுட் ஆகிய இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் அவர்  படைத்துள்ளார். 

Next Story