ரஹானே அணியில் இல்லாததற்கு அவரது காயம்தான் காரணமா..?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Dec 2021 10:36 PM GMT (Updated: 3 Dec 2021 10:36 PM GMT)

அணியில் தனக்கொரு இடத்தை தக்கவைக்கவேண்டிய நெருக்கடியில் ரஹானே உள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே இந்த ஆண்டில் 21 இன்னிங்சில் விளையாடி 2 அரைசதம் உள்பட 411 ரன்கள் (சராசரி ரன் 19.57) மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ந்து சொதப்புவதால் அவரை நீக்க வேண்டும் என்று விமர்சனங்கள் கிளம்பின. ரஹானேவுக்காக நன்றாக ஆடும் ஸ்ரேயாஸ் அய்யரை வெளியே உட்காரவைக்கக்கக் கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் முதலாவது டெஸ்டின் கடைசி நாளில் இடது காலில் லேசான தசைப்பிடிப்பால் அவதிப்பட்டதாகவும், அதில் இருந்து முழுமையாக மீளாததால் மும்பை டெஸ்டில் விளையாடவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஹானே முதலாவது டெஸ்டின் கடைசி நாளில் 90 ஓவர்கள் முழுமையாக பீல்டிங் செய்தார். சில நேரம் பவுண்டரி நோக்கி ஓடியதையும் பார்க்க முடிந்தது. நேற்று முன்தினம் கூட உள்விளையாட்டு அரங்கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். வலியுடன் இருந்தால் அவரால் எப்படி பயிற்சி மேற்கொள்ள முடியும். அப்படி பயிற்சி செய்தால் காயத்தன்மை தான் சிக்கலாகும். எனவே காயம் என்ற பெயரில் கவுரவமாக அவரை அணி நிர்வாகம் வெளியே உட்கார வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. அணியில் தனக்கொரு இடத்தை தக்கவைக்கவேண்டிய நெருக்கடியில் ரகானே உள்ளார்.


Next Story