கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்: இந்தியாவின் சாதனைகள்...! + "||" + Records created after India's win against Newzealand in the Wankhede Test Match.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்: இந்தியாவின் சாதனைகள்...!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்: இந்தியாவின் சாதனைகள்...!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் சில சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.
மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி, வெறும் 43 நிமிடங்களிலேயே இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான இந்த  போட்டியில், இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் சில சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை வருமாறு,
 
9-வது முறையாக தொடர் நாயகன் 'அஸ்வின்':- 

14 விக்கெட்களை கைப்பற்றியது  மட்டுமின்றி, பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பு அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில், இலங்கை அணியின் முன்னாள் வீரர், சுழற்பந்துவீச்சு ஜாம்பவான், முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக, அஸ்வின் இரண்டாம் இடத்தில் உள்ளார். முரளிதரன் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை  வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்தார்.

அதேபோல, சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடம்பிடித்தார். அவர் 49 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 300 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், 2-வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்து அசத்திய மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, வான்கடே மைதானத்தில் உள்ள கௌரவப் பலகையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது.

சொந்த மண்ணில் தொடரும் வெற்றிநடை:-

2013ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்று  இந்திய  அணி சாதனை படைத்துள்ளது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்  மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில்  எதிரணியை வீழ்த்தி உள்ளது.

அதேபோல, நியூசிலாந்து அணி  தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்  மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில்  எதிரணியிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி  இதுவரை இந்திய அணிக்காக விளையாடிய சர்வதேச போட்டிகளில், இந்திய அணி 50  போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்  கோலி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 வெற்றிகளை பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல், ஒரு அணி தோல்வி அடைந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்த சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 225 ரன்களை விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அதேபோல, இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 10  விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஜாஸ் படேல் பெற்றார். 

இதன்மூலம், ஒரே இன்னிங்சில் 10  விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனை பட்டியலில் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவை தொடர்ந்து 3-வது நபராக அஜாஸ் பட்டேல் இணைந்தார். 

2020ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை காணாத நியூசிலாந்து அணி, 2020 ஜனவரிக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தோற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் இன்று நடக்கிறது.
2. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: தென் ஆப்ரிக்காவின் முக்கிய வீரர் வெளியேற்றம்..!
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
3. இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.
4. இந்தியாவில் கொரோனா 3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா? - நிபுணர் பதில்
இந்தியாவில் தொடர்ந்து தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
5. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு...!
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது.