கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு + "||" + Indian squad for the South Africa tour likely to be announced today

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
தென்னாப்பிரிக்கா தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மும்பை ,

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், 4 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் காரணமாக, இந்த தொடர் நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது ஒரு வாரம் தாமதமாக இந்தத் தொடர் தொடங்க இருக்கிறது. 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11-ந் தேதியும் தொடங்குகிறது.  முதல் இரு ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பார்ல் மைதானத்திலும், கடைசி போட்டி 23 -ஆம் தேதி கேப்டவுனிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்க இருக்கிறது.தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் துணை கேப்டன் ரஹானே, அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. மோசமான பார்ம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே சேர்க்கப்படவில்லை. இதனால், தென்னாப்பிரிக்க தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சச்சின் பேட்டி
இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புவதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
2. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
4. பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி
பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
5. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.