இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன் “விராட் கோலி” - இர்பான் பதான் புகழாரம்


இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன் “விராட் கோலி” - இர்பான் பதான் புகழாரம்
x
தினத்தந்தி 7 Dec 2021 5:56 AM GMT (Updated: 7 Dec 2021 5:56 AM GMT)

விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.  இதில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.  இதில், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதற்கு முன் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இந்த நிலையில், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்காக பி.சி.சி.ஐ. அமைப்பு கோலிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளது. மேலும் பலரும் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், ''நான் ஏற்கனவே கூறியது போல் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன். 59.09 என்கிற வெற்றி சதவீதத்துடன் அவர் முதலிடத்தில் உள்ளார்'' என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story