தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 3:44 PM GMT (Updated: 8 Dec 2021 3:44 PM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது

தென்ஆப்பிரிக்காவில்  ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின், தென்ஆப்பிரிக்க பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்படுவதுடன், 20 ஓவர் தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 17ந்தேதி துவங்குவதாக இருந்தது.  தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி டிசம்பர் 26 ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில்  தென் ஆப்பிரிக்காவுக்கு  எதிரான டெஸ்ட் போட்டிக்கான 18 பேர் கொண்ட  இந்திய  அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய  அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா , ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, ரகானே , ஷ்ரேயாஸ் அய்யர் , ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட் , விருத்திமான் சாஹா ,  அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், சிராஜ்.


Next Story