கிரிக்கெட்

வீராங்கனைக்கு கொரோனா எதிரொலி: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இருந்து இந்திய அணி வெளியேற்றம்..? + "||" + Corona echoes player: Indian team expelled from Asian Champions Trophy?

வீராங்கனைக்கு கொரோனா எதிரொலி: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இருந்து இந்திய அணி வெளியேற்றம்..?

வீராங்கனைக்கு கொரோனா எதிரொலி: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இருந்து இந்திய அணி வெளியேற்றம்..?
இந்திய அணி வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்திய அணியினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
டாங்கே, 

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் உள்ள டாங்கே நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. 

இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை நேற்று முன்தினம் சந்திக்க இருந்தது. இதற்கு முந்தைய நாளில் இந்திய அணி வீராங்கனை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததால் அந்த ஆட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதுடன், இந்திய அணியினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன் நேற்று நடக்க இருந்த இந்தியா-சீனா ஆட்டமும் தள்ளிவைக்கப்பட்டது. 

இதனால் இந்த போட்டியில் இந்திய அணி தொடர்ந்து விளையாடுமா? என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மலேசிய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது போல் இந்திய அணியும் வெளியேற்றப்படுகிறது. 

வீராங்கனை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பங்கேற்க முடியாது என்று ஆசிய ஆக்கி சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
எளிதில் வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
2. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி
2-வது லீக் ஆட்டத்தில் 9-0 கோல் கணக்கில் வங்காளதேசத்தை இந்திய அணி பந்தாடியது.
3. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-தென்கொரியா இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
4. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்
டாக்காவில் நடைபெற இருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி; இந்திய பெண்கள் அணிக்கு சவிதா கேப்டன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய பெண்கள் அணிக்கு கோல் கீப்பர் சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.