ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்: ஜோ ரூட் புதிய சாதனை


ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்: ஜோ ரூட் புதிய சாதனை
x
தினத்தந்தி 11 Dec 2021 1:18 AM GMT (Updated: 2021-12-11T06:48:13+05:30)

டெஸ்ட் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் இதுவரை 1,544 ரன்கள் (13 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இதன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் 2002-ம் ஆண்டில் 1,481 ரன்கள் (14 டெஸ்ட்) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது. அவரது 19 ஆண்டு கால சாதனையை ஜோ ரூட் முறியடித்தார்.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது யூசுப் முதலிடத்தில் (2006-ம் ஆண்டில் 1,788 ரன்கள் எடுத்தார்) உள்ளார். அந்த அரிய சாதனையை தகர்க்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 248 ரன்கள் தேவைப்படுகிறது.

Next Story