ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட்: ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகம்..!


ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட்: ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகம்..!
x
தினத்தந்தி 12 Dec 2021 7:11 PM GMT (Updated: 2021-12-13T00:41:55+05:30)

ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

பிரிஸ்பேன்,

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. 

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. முதலாவது டெஸ்டின் போது விலா பகுதியில் வலியால் அவதிப்பட்ட அவர் தற்போது தனது சொந்த ஊரான சிட்னிக்கு சென்று விட்டார். அதனால் அவர் உடனடியாக அடிலெய்டில் அணியினருடன் இணைவது கடினம் தான். எனவே 2-வது டெஸ்டில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜய ரிச்சர்ட்சன் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. 

இதே போல் பந்து தாக்கி காயமடைந்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரும் 2-வது டெஸ்டில் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் உஸ்மான் கவாஜா இடம் பெறுவார்.

Next Story