ஒரே ஓவரில் 6 விக்கெட்... 16 வயது இந்திய வம்சாவளி சிறுவன் சாதனை...!

ஐக்கிய அரபு அமீரகத்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹர்ஷித் சேத் ஒரு ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அரிய சாதனை படைத்துள்ளார்.
துபாய் ,
ஐக்கிய அரபு அமீரகத்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹர்ஷித் சேத், துபாயில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அஜ்மான் கிரிக்கெட் கவுன்சில் நடத்திய கர்வான் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் கிளப் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர் ) ஒரு ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அரிய சாதனை படைத்துள்ளார்.
துபாய் கிரிக்கெட் கவுன்சில் ஸ்டார்லெட்ஸ் அணிக்காக விளையாடி வரும் சேத் பாகிஸ்தான் அணியான ஹைதராபாத் ஹாக்ஸ் அகாடமி ஆர்சிஜிக்கு எதிராக ஒரு ஓவரில் ஆறு பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் எதிரணியை 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்ய முக்கிய பங்காற்றினார்.
ஹர்ஷித் சேத் டெல்லியில் பிறந்தவர். துபாய் ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் 11-ம் வகுப்பு படிக்கும் ஹர்ஷித், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story