‘இந்திய ஜெர்சியை அணிவதில் பெருமை; என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ - அறிமுக வீரர் பிரியங்க் பன்ச்சால்


‘இந்திய ஜெர்சியை அணிவதில் பெருமை; என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ - அறிமுக வீரர் பிரியங்க் பன்ச்சால்
x
தினத்தந்தி 14 Dec 2021 8:37 AM GMT (Updated: 14 Dec 2021 9:09 AM GMT)

ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் பிரியங்க் பன்ச்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய அணி டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் டெஸ்ட் தொடருக்கான அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் தொடருக்கான அணி தோவுக்கான பரிசீலனைகள் நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால்,  புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (வி.கே.), விருத்திமான் சாஹா (வி.கே.), ஆர்.அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்சான் நாக்வாஸ்வல்லா ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் பிரியங்க் பன்ச்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 26ம் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 11ம் தேதி தொடங்குகிறது.

இந்திய-ஏ அணியின் கேப்டனான  பிரியங்க் பன்ச்சால், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கீழ், தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் ஆரம்ப காலகட்டத்திலேயே பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். 2019ம் ஆண்டு இந்திய-ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், ‘கிரிக்கெட் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும், எப்போதும் சாதாரணமாக நடந்து கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார்’ என்றும் கூறியுள்ளார். 

பிரியங்க் பன்ச்சால் 100 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 24 சதங்கள் உட்பட 7000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.“15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் நான் பயிற்சி பெறும்போது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது” என்று அவர் கூறியுள்ளார்.

“உங்களுடைய இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துங்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பாணியையே கடைபிடியுங்கள். இதற்காக ஆட்டத்திறனை மற்ற வேண்டாம். இயல்பாக இருங்கள்.

என்னுடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான் தென் ஆப்பிரிக்க தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

31 வயதான குஜராத்தை சேர்ந்த பிரியங்க், சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்திய-ஏ அணியை வழிநடத்தினார். அந்த  டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன. மூன்றாவது டெஸ்ட் போட்டி கொரோனா பாதிப்பால் பாதியிலேயே ரத்தானது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் அவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Next Story