பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி - கராச்சியில் இன்று நடைபெறுகிறது + "||" + The 2nd over 20 match between Pakistan and West Indies will be played in Karachi today
பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி - கராச்சியில் இன்று நடைபெறுகிறது
நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கராச்சி,
பாகிஸ்தான் சென்று இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் அணி, அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கராச்சியில் நேற்று நடைபெற்றது.
நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கராச்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி இந்த தொடரை கைப்பற்றும். அதே போல் இந்த தொடரை இழக்காமல் இருக்க வெஸ்ட்இண்டீஸ் அணி கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.