தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் : விராட் கோலி


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் : விராட் கோலி
x
தினத்தந்தி 15 Dec 2021 8:21 AM GMT (Updated: 2021-12-15T14:56:05+05:30)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்திய  ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி நீக்கப்பட்டு  கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்  தொடரிலிருந்து  விராட் கோலி விலகுவதாக தகவல்  வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள  விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  விளையாட தயார் ,ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு  எடுக்க விரும்பவில்லை என்று கோலி விளக்கமளித்துள்ளார்.

Next Story