பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: கிளென் மேக்ஸ்வெல் சதம் வீண்


பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: கிளென் மேக்ஸ்வெல் சதம் வீண்
x
தினத்தந்தி 15 Dec 2021 1:57 PM GMT (Updated: 2021-12-15T19:27:43+05:30)

அதிரடியாக விளையாடிய ஜோஷ் பிலிப் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 99 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் .

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள்  பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள்  முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளென் மேக்ஸ்வெல் 57 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார்.

178 ரன்கள் இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ்  அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் பிலிப் ஆட்டமிழக்காமல்  61 பந்துகளில் 99 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் . இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.    

Next Story