தென்ஆப்பிரிக்க ஆடுகளத்தை இந்திய பவுலர் ஒருவரால் சாதகமாக பயன்படுத்த முடியும்: டீன் எல்கர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Dec 2021 8:24 PM GMT (Updated: 2021-12-22T01:54:30+05:30)

தென்ஆப்பிரிக்க ஆடுகளத்தை இந்திய பவுலர் ஒருவரால் சாதகமாக பயன்படுத்த முடியும் என்று டீன் எல்கர் கூறியுள்ளார்.

செஞ்சூரியன், 

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்திய அணி திறமையான வேகப்பந்திவீச்சாளர்களை கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளம் மற்றும் சீதோஷ்ண நிலையை இந்திய பவுலர் ஒருவரால் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அது நிச்சயம் ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும். என்று எல்கர் கூறினார்.Next Story