விராட் கோலியின் கேப்டன் சர்ச்சை தொடர்பாக கங்குலி பேசியிருக்க கூடாது - திலீப் வெங்சர்கார்


Image courtesy:getty images
x
Image courtesy:getty images
தினத்தந்தி 22 Dec 2021 4:44 PM GMT (Updated: 2021-12-22T22:14:49+05:30)

தேர்வுக்குழு சார்பாக கங்குலி கருத்து தெரிவித்திருக்க கூடாது என்று திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.


மும்பை,

விராட் கோலியின் கேப்டன் சர்ச்சை தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர்  திலீப் வெங்சர்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தேர்வுக்குழு உறுப்பினருமான திலீப் வெங்சர்கார்  கூறுகையில், 

“தேர்வுக்குழு சார்பாக கங்குலி கருத்து தெரிவித்திருக்க கூடாது.ஏதாவது பிரச்சினை என்றால் தேர்வுக்குழுவின் தலைவர் சேத்தன் சர்மா தான் பொதுவெளியில் பேச வேண்டும்.

ஒரு அணியின் கேப்டன் யார் என்பதை தேர்வுக்குழு தான் தீர்மானிக்கும். அது கங்குலியின் அதிகார வரம்பு அல்ல” என்று கடுமையாக சாடியுள்ளார்.  

இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசுகையில், “கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை. இதன் காரணமாகவே ஒருநாள் மற்றும் டி20 என இருவகை வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கோலியிடம் பிசிசிஐ சார்பில் கேட்டுகொண்டோம். ஆனால் கேப்டன் பொறுப்பில் தொடருவதை கோலி விரும்பவில்லை.”

இவ்வாறு கங்குலி தெரிவித்திருந்த நிலையில், இதற்கு நேர் மாறாக கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தன்னை விலகவேண்டாம் என்று பிசிசிஐ சார்பில் யாரும் கேட்டுக் கொள்ளவில்லை” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Next Story