பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் இன்று மோதல்


பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Dec 2021 3:11 AM GMT (Updated: 23 Dec 2021 3:11 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள்  பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன்  ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில்  இன்று நடைபெறும் ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன்  ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

அதே போல் பிரிஸ்பேன்  ஹீட் அணியும் தாங்கள் விளையாடிய  4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் 7-வது இடத்தில் உள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி இந்திய நேரப்படி பகல் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

Next Story