லங்கா பிரீமியர் லீக் இறுதி போட்டி: காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை


லங்கா பிரீமியர் லீக்  இறுதி போட்டி: காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 23 Dec 2021 5:39 AM GMT (Updated: 23 Dec 2021 5:39 AM GMT)

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹம்பந்தோட்டா,

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தான் லங்கா பிரீமியர் லீக் முதல் சீசன் நடத்தப்பட்டது.இதில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடர் போன்றே இந்த  லீக்கிலும்  பல்வேறு நாட்டு கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.கொழும்பு ஸ்டார்ஸ் , டம்புல்லா ஜியாண்ட்ஸ் , கலே  கிளாடியேட்டர்ஸ், ஜஃப்னா கிங்ஸ் , கண்டி  வாரியர்ஸ்  ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா கிங்ஸ் அணி இந்த தொடரில் 8 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில்முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. பானுக ராஜபக்ச
தலைமையிலான காலே கிளாடியேட்டர்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது  அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story