ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:ஹர்னூர்சிங் அதிரடி சதம்; இந்தியா வெற்றி


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:ஹர்னூர்சிங் அதிரடி சதம்; இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 24 Dec 2021 12:49 AM GMT (Updated: 2021-12-24T06:56:14+05:30)

இந்திய வீரர் ஹர்னூர்சிங் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

துபாய்,

8 அணிகள் இடையிலான 9வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று துபாயில் நடந்த தொடக்க லீக் (ஏ பிரிவு) ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை சந்தித்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 282 ரன்கள் சேர்த்தது. 

ஹர்னூர்சிங் 120 ரன்னும் (130 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் யாஷ் துல் 63 ரன்னும் விளாசினர். தொடர்ந்து ஆடிய அமீரக அணி 34.3 ஓவர்களில் 128 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இந்தியா 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

சதம் அடித்த பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னூர் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.இந்த தொடரில் நேற்று நடந்த மற்றொரு பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இலங்கை 274 ரன்கள் வித்தியாசத்தில் குவைத்தையும் பந்தாடியது.

Next Story