15 போட்டிகளில் 14 டக் அவுட் - இங்கிலாந்து தொடக்க ஜோடியின் மோசமான சாதனை


15 போட்டிகளில் 14 டக் அவுட் - இங்கிலாந்து தொடக்க ஜோடியின்  மோசமான சாதனை
x
தினத்தந்தி 28 Dec 2021 4:26 AM GMT (Updated: 2021-12-28T09:56:03+05:30)

2021 ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களுக்கு இது 14வது டெஸ்ட் டக் அவுட் ஆகும்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது.

இன்று முடிந்த 3-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற  ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து தொடக்க  வீரர் ஹசீப் ஹமீத் டக் அவுட்டாகி வெளியேறினார். ஹசீப் ஹமீத் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனது மூலம் இங்கிலாந்து அணி இந்த ஆண்டு மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதன்படி 2021 ஆம் ஆண்டு மட்டும்  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களுக்கு  இது 14வது டெஸ்ட் டக் அவுட் ஆகும். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி கடந்த 1998 அம ஆண்டு  7 முறை டக் அவுட்டானதே அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமின்றி  டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021 ஆம்  ஆண்டில் இங்கிலாந்து அணியின்  ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களின் 50-வது டக்அவுட் இதுவாகும்.

Next Story