டி20 கேப்டன் பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய விராட் கோலியை வலியுறுத்தினோம்: தேர்வு குழு தலைவர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 Dec 2021 9:47 PM GMT (Updated: 31 Dec 2021 9:47 PM GMT)

இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கோலியிடம் யாரும் சொல்லவில்லை.

புதுடெல்லி, 

இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக முடிவு எடுத்த போது, இந்த முடிவை கைவிடுங்கள் என்று வலியுறுத்தியும் அதை அவர் ஏற்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறினார். ஆனால் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்க வேண்டாம் என்று கிரிக்கெட் வாரியம் தரப்பில் யாரும் தன்னை கேட்கவில்லை என்று விராட் கோலி கூறி சமீபத்தில் சர்ச்சையை கிளப்பினார். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக எடுத்த முடிவு எங்களை ஆச்சரியப்படுத்தியது. தேர்வு கமிட்டியினர், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரும் விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள், 20 ஓவர் உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அது பற்றி பேசிக்கொள்ளலாம் என்று கோலியிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் தனது திட்டத்தில் உறுதியாக இருந்தார். 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கோலியிடம் யாரும் சொல்லவில்லை. இது அவரது தனிப்பட்ட முடிவு. ஆனால் 20 ஓவர் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகியதும், வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) ஒரே கேப்டனே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ரோகித் சர்மாவை நியமித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story