இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Jan 2022 9:10 PM GMT (Updated: 2022-01-03T02:40:41+05:30)

முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பார்ல் நகரில் நடக்கிறது.

ஜோகன்னஸ்பர்க்,

டெஸ்ட் தொடர் முடிந்ததும் தென்ஆப்பிரிக்கா- இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பார்ல் நகரில் நடக்கிறது. 

ரோகித் சர்மா காயத்தால் அவதிப்படுவதால் இந்திய ஒரு நாள் போட்டி அணி லோகேஷ் ராகுல் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சென் ஒரு நாள் போட்டி அணிக்கும் முதல்முறையாக தேர்வாகியுள்ளனார். அதே சமயம் காயத்தில் இருந்து மீளாத வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற குயின்டான் டிகாக் ஒரு நாள் போட்டியில் தொடருகிறார்.தென்அப்பிரிக்க ஒரு நாள் போட்டி அணி வருமாறு:-

பவுமா (கேப்டன்), கேஷவ் மகராஜ் (துணை கேப்டன்), குயின்டான் டி காக், ஜூபைர் ஹம்சா, மார்கோ ஜான்சென், ஜான்மேன் மலான், சிபாண்டா மஹாலா, மார்க்ராம், டேவிட் மில்லர், இங்கிடி, வெய்ன் பார்னெல், பெலக்வாயோ, பிரிட்டோரியஸ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி, வான்டெர் துஸ்சென், கைல் வெரைன்.


Next Story