கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று..! + "||" + Australia cricketer Glenn Maxwell tests positive for COVID-19

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று..!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள்  பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன்  ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம், இந்த தொடரில் பங்கேற்ற வீரர்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 13-வது வீரராக அவர் மாறியுள்ளார்.

முன்னதாக, நேற்று நடைபெற இருந்த பிரிஸ்பேன்  ஹீட்- சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படி தொடர்ந்து வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும் பிக்பாஷ் லீக் தொடரை நடத்துவதில் அதன் ஒருங்கிணைப்பார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 377 பேருக்கு கொரோனா; மேலும் 910 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வடகொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவால் பலி: தென்கொரியாவின் தடுப்பூசி உதவியை ஏற்குமா?
வட கொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தென்கொரியாவின் தடுப்பூசி உதவிகளை வடகொரியா ஏற்று பேரழிவை தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3. டெல்லியில் புதிதாக 613 பேருக்கு கொரோனா; மேலும் 784 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு : கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்- சோகத்தில் ரசிகர்கள்
தலைசிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய சைமண்ட்ஸ்-யின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
5. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு..!!
பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவைத் தவறவிடும் சூழல் உருவாகி உள்ளது.