ஐ.சி.சி. டெஸ்ட் புதிய தரவரிசை: விராட் கோலி சறுக்கல் + "||" + ICC releases latest Test rankings, KL Rahul jumps 18 places,Virat Kohli retains his place in top 10
ஐ.சி.சி. டெஸ்ட் புதிய தரவரிசை: விராட் கோலி சறுக்கல்
கேப்டன் விராட் கோலி 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
லண்டன்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் லோகேஷ் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.
கேப்டன் விராட் கோலி 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.