ஆஷஸ் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா


ஆஷஸ் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 6 Jan 2022 7:50 AM GMT (Updated: 2022-01-06T13:20:10+05:30)

இங்கிலாந்து அணி இன்னும் 403 ரன்கள் பின் தங்கியுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. 

இரு அணிகளும் மோதும் 4-வது ஆஷிஸ் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இன்று நடைபெற்று முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 13 ரன்கள் எடுத்துள்ளது. ஹசீப் அகமது 2 ரன்னுடனும் சாக் கிராலி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி இன்னும் 403 ரன்கள் பின் தங்கியுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடர்ந்து நடைபெற உள்ளது.

Next Story