ஆஷஸ் டெஸ்ட் : 4 -வது நாள் ஆட்ட நேர முடிவு : இங்கிலாந்து வெற்றி பெற 358 ரன்கள் தேவை..!


ஆஷஸ் டெஸ்ட் : 4 -வது நாள் ஆட்ட நேர முடிவு :  இங்கிலாந்து வெற்றி பெற 358 ரன்கள் தேவை..!
x
தினத்தந்தி 8 Jan 2022 8:46 AM GMT (Updated: 2022-01-08T14:16:22+05:30)

ஆஸ்திரேலிய அணி,இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவின் சதத்தின் உதவியுடன், 294 ரன்களை எடுத்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து  டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் 4ம்  நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 358 ரன்கள் தேவைப்படும் நிலையில் , 5 வது நாள் ஆட்டம் நாளை தொடங்க உள்ளது.


Next Story