வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கிரிக்கெட் தொடர்: மைதானங்களை குறைக்க பி.சி.சி.ஐ. முடிவு


வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கிரிக்கெட் தொடர்: மைதானங்களை குறைக்க பி.சி.சி.ஐ. முடிவு
x
தினத்தந்தி 9 Jan 2022 12:15 PM GMT (Updated: 9 Jan 2022 2:13 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.


மும்பை 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்க இருக்கிறது .

 இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கொரோனா உச்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டி நடைபெறும் மைதானத்தை குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

போட்டிகளை நடத்த 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 3 இடங்களாக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கிறது 


Next Story