கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - ஆஸ்திரேலியா தடுமாற்றம் + "||" + England in a Commanding Position on 4th Ashes Test Against Australia

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - ஆஸ்திரேலியா தடுமாற்றம்

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - ஆஸ்திரேலியா தடுமாற்றம்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று தொடங்கியுள்ளது.
ஹாபெர்ட்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷிஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் குவாஜா களமிறங்கினர். 22 பந்துகளை சந்தித்த வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் ராபின்சன் பந்து வீச்சில் வெளியேறினார். குவாஜா 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

ஸ்டீவ் ஸ்மித் 2 பந்தில் ரன் எடுத்துவும் எடுக்காமல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால், சற்று நிலைத்து நின்று ஆடிய மார்னஸ் லபுஷேன் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. டிராவஸ் ஹெட் 31 ரன்னிலும் கமரூன் கிரீன் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது
146 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரையும் கைப்பற்றியது.
2. ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..!
ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
3. ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 34-2
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.
4. வித்தியாசமான ஷாட் ஆடும் முயற்சியில் சறுக்கி விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த லபுஷேன்...!
வித்தியாசமான ஷாட் ஆட முயற்சித்த போது சறுக்கி விழுத்ததால் லபுஷேன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
5. ஆஷஸ் டெஸ்ட் : 4 -வது நாள் ஆட்ட நேர முடிவு : இங்கிலாந்து வெற்றி பெற 358 ரன்கள் தேவை..!
ஆஸ்திரேலிய அணி,இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.