கிரிக்கெட்

வித்தியாசமான ஷாட் ஆடும் முயற்சியில் சறுக்கி விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த லபுஷேன்...! + "||" + Labuschgne Lose His Wicket in a unusual Maner to Stuart Broad

வித்தியாசமான ஷாட் ஆடும் முயற்சியில் சறுக்கி விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த லபுஷேன்...!

வித்தியாசமான ஷாட் ஆடும் முயற்சியில் சறுக்கி விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த லபுஷேன்...!
வித்தியாசமான ஷாட் ஆட முயற்சித்த போது சறுக்கி விழுத்ததால் லபுஷேன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஹாபெர்ட்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷிஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான வார்னர் ரன் எதுவும் எடுக்காமலும் (0), குவாஜா 6 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியாகி ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் (0) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

ஆனால், 3-வது வீரராக களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் கணக்கை வெகுவாக உயர்த்தினார். உணவு இடைவெளை நெருங்கிய நிலையில் 23-வது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். 

44 ரன்கள் எடுத்திருந்த மார்னஸ் லபுஷேன் அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். பிராட் பந்தை வீசிய உடன் அதை ஸ்டெம்பை விட்டு விலகி சென்று வித்தியாசமான ஷாட் அடிக்க லபுஷேன் முயற்சித்தார். ஆனால், அந்த ஷாட் அடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த லபுஷேன் சறுக்கி விழுந்தார். 

இதனால், பிராட் வீசிய பந்தை லபுஷேன் முற்றிலும் தவறவிட்டார். பந்து மின்னல் வேகத்தில் ஸ்டெம்பை தாக்கியது. இதனால், லபுஷேன் மோசமான முறையில் அவுட் ஆனார். லபுஷேன் அவுட் ஆன வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.        தொடர்புடைய செய்திகள்

1. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது
146 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரையும் கைப்பற்றியது.
2. ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..!
ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
3. ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 34-2
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.
4. ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - ஆஸ்திரேலியா தடுமாற்றம்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று தொடங்கியுள்ளது.
5. ஆஷஸ் டெஸ்ட் : 4 -வது நாள் ஆட்ட நேர முடிவு : இங்கிலாந்து வெற்றி பெற 358 ரன்கள் தேவை..!
ஆஸ்திரேலிய அணி,இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.