கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி- தொடரையும் வென்றது + "||" + South Africa won by 7 wkts

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி- தொடரையும் வென்றது

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி- தொடரையும் வென்றது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
கேப்டவுன்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 223 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. 

13 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரிஷப் பண்ட் (100 ரன்கள் நாட் அவுட்) தவிர வேறு எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.  இந்திய அணி 2-வது இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.  இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதை நோக்கி தென்ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 29.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து, இன்று 4- ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

63.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 212- ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எட்டியது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக  கீகன் பீட்டர்சன் 82 ரன்கள் குவித்தார். இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் தன் வசப்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைவு
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது.
2. இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு - பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா-மத்திய ஆசிய நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு ஐ.நா. சபை ஆதரவு
உலகிலேயே மிகப்பெரிய இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.