கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அயர்லாந்து அணி அபாரம்..! + "||" + 2nd ODI: Ireland beat West Indies

2வது ஒருநாள் போட்டி : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அயர்லாந்து அணி அபாரம்..!

2வது ஒருநாள் போட்டி : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அயர்லாந்து அணி அபாரம்..!
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
ஜமைக்கா:

அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து  விளையாடி வருகிறது

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி  வெற்றி பெற்றது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 11ம் தேதி நடைபெற இருந்த இரண்டாவது போட்டி கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.

 இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 48 ஓவரில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . அதிகபட்சமாக ரோமாரியோ ஷெப்பர்டு 50 ரன்னும் ஒடியன் ஸ்மித் 46 ரன்னும், புரூக்ஸ் 43 ரன்னும் எடுத்தனர்.

அயர்லாந்து சார்பில் ஆண்டி மெக்பிரின் 4 விக்கெட், கிரெய்க் யங் 3 விக்கெட்டும்,விக்கெட்டும் வீழ்த்தினர்

தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. 32வது ஓவரில் 4 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது.

இதனால் டி.ஆர்.எஸ். முறைப்படி, 36 ஓவரில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அயர்லாந்து 32.3 ஓவரில் 168 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹாரி டெக்டார் அரை சதமடித்து 54 எடுத்து  ஆட்டமிழக்காமல் இருந்தார் .3வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.