கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 34-2 + "||" + 4th Ashes Test On England vs Australia Current Update

ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 34-2

ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 34-2
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.
ஹாபெர்ட்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷிஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முத்லைல் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் வார்னர் (0) ரன் எதுவும் எடுக்காமலும், குவாஜா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த லபுஷேன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்மித் (0) ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினார்.

பின்னர் வந்த டிராவஸ் ஹெட் மற்றும் கமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிராவஸ் ஹெட் சதம் அடித்தார். அவர் 101 ரன்களில் வெளியேறினார். கமரூன் கிரீன் 74 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ராய் பர்ன்ஸ் மற்றும் சக் க்ளவ்லே களமிறங்கினர். 6 பந்துகளை சந்தித்த ராய் ரன் எதுவும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். 21 பந்துகளை சந்தித்த சக் 18 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

தற்போது உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மாலன் 9 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட 269 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது
146 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரையும் கைப்பற்றியது.
2. ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..!
ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
3. வித்தியாசமான ஷாட் ஆடும் முயற்சியில் சறுக்கி விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த லபுஷேன்...!
வித்தியாசமான ஷாட் ஆட முயற்சித்த போது சறுக்கி விழுத்ததால் லபுஷேன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
4. ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - ஆஸ்திரேலியா தடுமாற்றம்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று தொடங்கியுள்ளது.
5. ஆஷஸ் டெஸ்ட் : 4 -வது நாள் ஆட்ட நேர முடிவு : இங்கிலாந்து வெற்றி பெற 358 ரன்கள் தேவை..!
ஆஸ்திரேலிய அணி,இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.