கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..! + "||" + Ashes Test: England set 271-run target

ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..!

ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..!
ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
ஹாபெர்ட்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி  களமிறங்கியது. 


முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

 தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது .இதனால் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வந்தது .பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்  இங்கிலாந்து 188 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது .

தொடர்ந்து ஆஸ்திரேலியா  தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியதால் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறியது. இதனால் ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.ஆஸ்திரேலியா  அணியின் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 49 ரன்கள் எடுத்தார் 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது
146 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரையும் கைப்பற்றியது.
2. ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 34-2
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.
3. வித்தியாசமான ஷாட் ஆடும் முயற்சியில் சறுக்கி விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த லபுஷேன்...!
வித்தியாசமான ஷாட் ஆட முயற்சித்த போது சறுக்கி விழுத்ததால் லபுஷேன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
4. ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - ஆஸ்திரேலியா தடுமாற்றம்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று தொடங்கியுள்ளது.
5. ஆஷஸ் டெஸ்ட் : 4 -வது நாள் ஆட்ட நேர முடிவு : இங்கிலாந்து வெற்றி பெற 358 ரன்கள் தேவை..!
ஆஸ்திரேலிய அணி,இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.