விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புகழாரம்


விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புகழாரம்
x
தினத்தந்தி 16 Jan 2022 10:31 AM GMT (Updated: 2022-01-16T16:01:46+05:30)

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1-2 என்ற கணக்கில் நேற்று முன்தினம் தொடரை இழந்தது.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி நேற்று அதிரடியாக அறிவித்தார். 33 வயதான விராட்கோலி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே அறிவித்தார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை விராட் கோலியின் ராஜினாமா ஏற்படுத்தியது.  

இந்த நிலையில், விராட் கோலியின் விலகல் குறித்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்  தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;-

கிரிக்கெட்டில் கேப்டன்கள் எப்போதும், தங்களின் சாதனைகள், வெற்றிகள், தாங்கள் அணியை நிர்வகித்த விதம் ஆகியவற்றைப் பற்றிப் பேசப்படுவார்கள். ஆனால், நீங்கள் கேப்டனாக காட்டிய மரபு,  கேப்டனுக்கென ஒரு தர அடையாளமாக இருக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உங்கள் தலைமை பெற்ற வெற்றியைப் பற்றி இனிவருவோர் பேசுவார்கள்.

உங்களுக்கு அடுத்து கேப்டனாக வருவோருக்கு உங்கள் சாதனைகளால் பெரிய தலைவலியை நீங்கள் விட்டுச் சென்றுவிட்டீர்கள் கோலி. அத்தகைய உயரத்தில் நாம் கண்டிப்பாக  ஒரு இடத்தை விட்டு வெளியேற வேண்டும். 
ஆனால், அந்த இடத்தை அங்கிருந்து எதிர்காலம்தான் மேலே கொண்டு செல்லும்” என்றார். 

Next Story