கிரிக்கெட்

முதலாவது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு..! + "||" + First ODI: Indian team aims to win by 297 runs ..!

முதலாவது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு..!

முதலாவது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு..!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பார்ல்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் குயின்டான் டி காக் மற்றும் ஜேன்மன் மலான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மலான் 6 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்தது குயின்டான் டி காக் 27 ரன்களும், மார்க்ராம் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பவுமாவுடன், வான்டெர் துஸ்சென் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் பவுமா மற்றும் துஸ்சென் ஆகியோர் தங்களது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினர். 

பின்னர் பவுமா 110 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பும்ரா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்ததாக துஸ்செனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். 

முடிவில் அதிரடி காட்டிய வான்டெர் துஸ்சென் 129 (96) ரன்களும், டேவிட் மில்லர் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதன்மூலம் இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2. தாமஸ் கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு..!!
இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
3. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் : முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி..!!
14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
4. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா?
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி நடக்கிறது.
5. சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை, மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன்- பஞ்சாப் வீரர்
தன்னை 5 ஆண்டுகளாக யாரும் தேர்வு செய்யவில்லை என பிரபல வீரர் தெரிவித்துள்ளார்.