கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் புதிய தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம் + "||" + ICC Test rankings | Virat Kohli, Rishabh Pant and Jasprit Bumrah move up

டெஸ்ட் கிரிக்கெட் புதிய தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் புதிய தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்
விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 10 இடங்கள் எகிறி 14-வது இடத்தை பெற்றுள்ளார்.
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. 

பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 79 மற்றும் 29 ரன்கள் வீதம் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. இதே டெஸ்டில் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 10 இடங்கள் எகிறி 14-வது இடத்தை பெற்றுள்ளார். 

ஆஷஸ் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 7 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் முதலிடத்தில் நீடிக்கிறார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), அஸ்வின் (இந்தியா) மாற்றமின்றி டாப்-2 இடங்களில் தொடருகிறார்கள். இந்தியாவின் பும்ரா 13-ல் இருந்து 10-வது இடத்துக்கு வந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. "நான் சிறப்பாக பந்து வீசியிருந்தால் கோலி ஐபிஎல் கோப்பையை வென்று இருப்பார்"- வாட்சன் உருக்கம்
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டி குறித்து ஷேன் வாட்சன் பேசியுள்ளார்.
2. ஐபிஎல் : விராட் கோலி புதிய சாதனை
இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
3. "வேகமாக ஓடும் உங்களுடன் பேட்டிங் செய்ய முடியாது" - கோலியிடம் கூறிய மேக்ஸ்வெல்- வைரல் வீடியோ
நேற்றைய போட்டியில் விராட் கோலி உடன் இணைந்து விளையாடிய போது மேக்ஸ்வெல் ரன் அவுட்டானார்.
5. மேக்ஸ்வெல் திருமண விழா : சமந்தாவின் புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய கோலி- வைரல் வீடியோ
"ஊ சொல்றியா " பாடலுக்கு கோலி நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.