ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்துக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா


ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்துக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 21 Jan 2022 6:13 PM GMT (Updated: 21 Jan 2022 6:13 PM GMT)

தென் ஆப்பிரிக்க அணி அயர்லாந்துக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

டிரினிடாட், 

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் டிரினிடாட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கன்னிங்கம் 11 ரன்னிலும், வலிண்டின் கிடிம் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். பொறுப்புடன் வெளையாடிய ப்ரிவிஸ் 96 ரன்கள் குவித்தார். கேப்டன் கீர்டன் 111 ரன்கள் விளாசினார். இறுதியில் காப்லாண்ட் அதிரடி காட்டி 47 ரன்கள் குவித்தார். 

தென் ஆப்பிரிக்கா 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்த போது  மழை குறுக்கீடு செய்ததால், ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா 3 ஓவர்கள் குறைக்கப்பட்டது.  இதையடுத்து அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.


Next Story