கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி + "||" + 3rd ODI against Zimbabwe: Sri Lanka won the match

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பல்லகெலே,

இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று நடந்தது. 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது.  அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் வரிசை இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. 

இறுதியில் ஜிம்பாப்வே அணி 24.4 ஓவர்களில் 70 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


தொடர்புடைய செய்திகள்

1. எங்கு இருக்கிறார் மகிந்த ராஜபக்சே? திடீர் என இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு
திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
2. இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை புறப்படுகிறது
சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
3. இலங்கையில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவால் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!
வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக இலங்கையில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
4. ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
5. இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது
இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.