கிரிக்கெட்

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: உகாண்டாவை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி! + "||" + Junior World Cup Cricket: India beat Uganda

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: உகாண்டாவை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: உகாண்டாவை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!
உகாண்டாவை 326 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
டிரினிடாட்,

16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி சிறிய அணியான உகாண்டாவுடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரான ரகுவன்சி பொறுப்புடன் விளையாடி 144 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டரில் ராஜ் பாவா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி, 8 சிக்சருடன் 162 ரன்களை விளாசினார். உகாண்டா அணியின் பந்துவீச்சாளர்களால் இந்திய அணியில் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இறுதியில் இந்திய அணி 50  ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் பஸ்கல் முருன்கி அதிகபட்சமாக 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 

முடிவில் உகாண்டா 19.4 ஓவர்களில் 79 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்து. இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் நிஷாந்த் சிந்து அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 162 ரன்கள் குவித்த ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு இதுவரை இந்தியா 4 லட்சம் டன் டீசல் அனுப்பியது - தூதரகம் தகவல்
இலங்கைக்கு இதுவரை 4 லட்சம் டன் டீசல் அனுப்பியுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
2. இந்தியா- நேபாளம் இடையேயான உறவு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி
நேபாளம் செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபாவை சந்திக்க உள்ளாா்.
3. இலங்கைக்கு இந்தியா 65 ஆயிரம் டன் யூரியா அனுப்புகிறது
உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில் இலங்கைக்கு இந்தியா 65 ஆயிரம் டன் யூரியா அனுப்ப உள்ளது.
4. ஆசிய கோப்பை போட்டி: இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் விலகல்
ஆசிய கோப்பை போட்டியில் இருந்து இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் விலகியுள்ளார்.
5. ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது - சீமான் வலியுறுத்தல்
ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தி உள்ளார்.